வீட்டு விற்பனையாளருக்கு ஒரு மனமார்ந்த கடிதம் எழுதி தனக்கும் தனது மகனுக்கும் ஒரு வீட்டை எவ்வாறு பெற்றுக்கொண்டேன் என ஒரு இளம் தாய் பகிர்ந்து கொண்டுள்ளார் . அவுஸ்திரேலியாவில் தற்போது வீடு வாங்குவது கடினமானது. மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. அதிகமான விலையில் ஏலம் எடுக்கவும் பலர் உள்ளனர்.
பேர்த்தைச் சேர்ந்த ஹர்ஸ்ட் என்ற அந்த தாய் $825,000க்கு ஒரு வீட்டை வாங்கினார். 30 வயதான இந்த புகைப்படக் கலைஞர், ஆறு மாதங்களாக ஒரு வீட்டை தேடிக்கொண்டிருந்ததாகவும், கேட்கும் விலையை விட பல்லாயிரக்கணக்கான விலைக்கு வீடுகள் விற்கப்படுவதைக் கண்டறிந்ததாகவும் யாஹூ ஃபைனான்ஸிடம் தெரிவித்தார்.
ஒரு நண்பரிடமிருந்து டிப்ஸைக் கேட்கும் வரை விற்பனையாளருக்கு ஒரு கடிதம் எழுதுவது பற்றி தான் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டேன் என்று ஹர்ஸ்ட் கூறினார். அவர்கள் பொதுவாக வீட்டை பார்வையிடுவதற்கான நாளை திட்டமிட்டிருக்க அதற்கு முந்தைய நாள் அந்த வீட்டை தனிப்பட்ட முறையில் பார்வையிட கோரிக்கை வைத்தார் அவர்.
அன்று அந்த வீட்டுக்கான விலையை வைத்து கொடுத்த கடிதத்தில் தான் யார் தனக்கும் தனது பிள்ளைக்கும் அந்த வீடு எவ்வளவு முக்கியமானது என்பதை விபரிக்கும் அந்த உருக்கமான கடிதத்தை எழுதினார் அவர்.
அந்த உருக்கமான கடிதம் விற்பனையாளரை உருக்கியது. ஆம் அந்த வீட்டை குறைந்த விலைக்கு பொருத்தமான இவர்களுக்கு கொடுத்துவிட்டார்கள்.
இச்செய்தி பற்றிய நேரடி இணைப்பு
https://au.finance.yahoo.com/news/touching-reason-single-mum-secured-825000-property-in-competitive-market-in-disbelief-043222800.html

