ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் முத்தமிழான இயல், இசை, நாடகம் என மூன்றையும் உள்ளடக்கியது. இப்பெருங்காப்பியத்தை மெல்பேணில் சிறப்பாக அரங்கேற்றிய பின்னர், எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி இரண்டு காட்சிகளை சிட்னியில் அரங்கேற்ற உள்ளனர்.
மூன்று மாநிலங்களில் இருந்தும் நாற்பத்தெட்டு கலைஞர்கள் இணைந்து, 80 இற்கும் மேற்பட்ட பாடல்களை இணைத்து சுமார் 2 மணி 45 நிமிடங்கள் காட்சியாக அரங்கேறுகின்றது.
இதில்பங்குபற்றும் கலைஞர்களில் மிகப் பெரும்பாலானவர்கள், மெல்பேர்ணின் இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள். யாவரும் சுத்தமான, இனிமையான தமிழ் பேசி, சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி பாராட்டை பெற்றவர்கள்.
உலகெங்கும் மீள் எழுச்சி பெற்று வரும் கூத்துக் கலைக்கு இந் நாடகம், மெல்பேர்ணின் மிக காத்திரமான பங்களிப்பாக அமைந்து நிற்கின்றது.



